380
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதன்போது, வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம்
தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love