383
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகொன்றை கைப்பற்றியதுடன், அதிலிருந்த ஒன்பது கடற்தொழிலார்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Spread the love