பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கௌரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகின்றது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும் இப்பரிசுக்காக அவர் தொிவு செய்யப்பட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி, இலக்கிய புதுமை, நகைச்சுவை, அறிவுக்கூர்மை ஆகியவற்றுடன் எழுதி வருவதாக விருது நடுவர் குழு தொிவித்துள்ளது. எதிாடவரும் ஒக்டோபர் 22ம் திகதி , பிராங்க்பேர்ட் நகரில் நடக்கும் விழாவில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படவுள்ளது .. 1950-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, 25 ஆயிரம் யுரோ பரிசுத்தொகை கொண்டதாகும்
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த புக்கர் பரிசு வென்றவரான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது