318
குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தாயை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறை சேவையில் இணைந்து களுத்துறை பகுதியில் காவல்துறைக் கடமையில் இருந்த வேளை அங்கு சிங்கள பெண்ணொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் தனது காவல்துறை சேவையை விட்டு , தனது சொந்த ஊரான ஊர்காவற்துறைக்கு திரும்பி அங்கு குடும்பமாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அந்நிலையில் கடந்த 06 நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் , மனைவியையும் , வைத்திய சாலையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் தனியே விட்டு விட்டு , கொண்டாட்ட நிகழ்வொன்றுக்காக வெளியூர் செல்ல முற்பட்டுள்ளார்.
தன்னையும் குழந்தையையும் தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம் எனவும், தமக்கு உதவிக்கு யாரும் இல்லை என கூறியுள்ளார். அதனால் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளது.
அதனை அடுத்து குழந்தை பிரசவித்து 06 நாட்களேயான தனது மனைவியை கடுமையாக தாக்கி , சித்திரவதை புரிந்துள்ளார். அதனால் மனைவிக்கு இரத்த பெருக்கு ஏற்பட்டு அவர் வலியினால் கதறியுள்ளார்.
அதன் போது கணவர் வீட்டை விட்டு வெளியேறி சென்ற பின்னர் வலியினால் அவல குரல் எழுப்பி கத்தியுள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினாிடம் ரிடம் மனைவி முறையிட்டதை அடுத்து கணவரை கைது செய்த பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியை அடுத்து அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
—
Spread the love