354
பாலுக்கு அழுத நாய் குட்டிகளால் தன் தூக்கம் பறிபோகுது என 07 நாய்க்குட்டியை உயிருடன் எரித்து கொன்ற நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் சாவகச்சேரி காவல்துறையினருக்கு பணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் 07 குட்டிகளை ஈன்றுள்ளது.
அந்த குட்டிகள் இரவு வேளைகளில் பாலுக்காக கத்தியுள்ளன. அதனால் இரவில் தன்னால் ஒழுங்கான முறையில் உறங்க முடியவில்லை என , வீட்டில் ஒரு கிடங்கொன்று வெட்டி , அதனுள் குப்பைகளை போட்டு தீ மூட்டிய பின்னர் , 07 நாய் குட்டிகளையும் அந்த தீயினுள் போட்டு படுகொலை செய்துள்ளார்.
இது குறித்து யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து , குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து , குற்றம் சாட்ட ப்பட்ட நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
Spread the love