தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 05 புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசியலமைப்பு சபை கூடிய போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தொிவு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி பெரேரா, முன்னாள் சட்ட ஆலோசகர் ஜனாதிபதியின் சட்டத்தரணி தீபானி குமாரஜீவ, சட்டத்தரணி அமீர் பைஸ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி ரமேஷ் ராமசாமி ஆகியோரின் பெயர்களும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
இவர்களது பதவிக்காலம் உரிய முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் 05 வருட காலத்திற்கு அமுலில் இருக்கு