443
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பலரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love