பல்லேகெலே, தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இரு சிறுவர்களும் உறவினர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
இரண்டு சிறுவர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அதில் ஒரு சிறுவன் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளதுடன் மற்றைய சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.