436
இன்றைய தினம் (யூன் 26) உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் அனுஸடிக்கப்படும் நிலையில் இலங்கையில் , சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை வியாபாரமாக செயற்படுத்துவதற்கு மூலோபாயமாக பணத்தை முதலீடு செய்து வருவதுடன் கஞ்சா பாவனையை முதலீட்டுத் திட்டமாக இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பாற்ற அனைவரின் பங்களிப்பும் அவசியம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
Spread the love