பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று (ஜூலை 8) பேரணி மேற்கொள்கின்றனர்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் சுதந்திரப் பேரணியை ஏற்பாடு செய்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு சுவரொட்டி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சுவரொட்டிகளில், “இந்தியாவை கொல்” என்ற வாசகம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற பிரிவினைவாத அமைப்பு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
பிரித்தானியாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, பேர்மிங்ஹாமில் உள்ள கவுன்சிலர் ஜெனரல் ஷஷாங்க் விக்ரம் ஆகியோரது புகைப்படங்களும் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இதேபோன்ற பிற சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜூலை 8ஆம் தேதி இந்தப் பேரணியைத் தொடங்கி, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது நோக்கமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில்
இந்தப் பதிவுகளில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. வீடியோவில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் போன்ற முக்கிய தலைவர்களை இந்திய அரசு கொன்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பிய நாடுகளில் என எங்கு இருந்தாலும் சரி நிஜ்ஜாரின் படுகொலைக்கு அனைத்து இந்திய தூதரக அதிகாரிகளுமே பொறுப்பாவார்கள்.
ஏனென்றால் வன்முறையைப் பயன்படுத்தும் தற்போதைய இந்திய அரசின் பிரதிநிதிகள் அவர்கள்,” என்று பன்னுன் வீடியோவில் கூறியுள்ளார். அதேநேரத்தில் இந்தப் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
BBC