நெதர்லாந்து நாட்டுப் பிரதமா் மார்க் ருடே பதவி விலகியுள்ளாா். மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்ளுக்குள் நிலவிய் கருத்து முரண்பாடு அதிகாித்து வந்துள்ளது.
ருடே சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் பதவி விலகியுள்ளாா். . இதன் காரணமாக 150 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற வுள்ளது. மார்க் ருடே நெதர்லாந்தில் நீண்ட காலமாக பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருபோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது கடந்த ஆண்டு 47 ஆயிரம் புகலிட அனுமதி கோாியுள்ள நிலையில், அது இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. . இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என மார்க் ருடே தலைமையிலான கட்சி தெரிவித்துள்ளது. எனினும் அதற்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தற்போது ஆட்சி கவிழ்ந்துள்ளது