மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் காவல்துறைப் பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 8 ஆம் திகதி நடைபெறும் என கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையகம் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன.
இந்தநிலையில் அங்கு ஏற்பட்ட மோதல்களில் 12 வயது சிறுவன் உட்ப ட 12 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது. . மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
தேர்தலை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வன்முறை ஏற்பட்டு இருக்கிறது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் என்பவா் கொல்லப்பட்டார். அவரது கொலையை தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வன்முறை வலுப்பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே இன்று . 65,000 துணை ராணுவப் படையினர் மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவல்துறையினாின் பாதுகாப்பு டன் வாக்குப்பதிவு ஆரம்பமான சில மணி நேரத்திலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1970 முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 90 சதவீத இடங்களிலும், அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.