448
லண்டனில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரின் மரண சடங்குக்கு வந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை , கடலில் மூழ்கிய சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு , மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனுக்கு 06 வயது எனவும் , லண்டனில் இருந்து தனது பெற்றோருடன் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரின் மரண சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த நிலையிலையே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love