386
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்து கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எந்த அமைப்பும் என்னுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை.தனியார் கல்விநிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை – என்றார்.
Spread the love