430
கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது கணவன் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். பிள்ளைகள் செட்டிக்குளம் பகுதியில் வசித்து வருவதால் , இவர் பளையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
அந்நிலையில் செட்டிக்குளத்தில் வசிக்கும் பிள்ளைகள் தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது , தொடர்பு கொள்ள முடியாததால் , பிள்ளைகள் நேரில் வந்து பார்த்த போது , வீட்டின் அறை ஒன்றில் சடலமாக காணப்பபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love