439
கஜமுத்துக்கள் , கைது
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெள்ளிக்கிழமை(14) மாலை கைதானார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த அம்பாறை தலைமையக காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love