392
வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதில் பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார். உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுபடுவதால், அதிகாரப்பகிர்வு, காணி திரும்பப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான பதில்களைக் கண்டறிதல், பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love