571
இலங்கை தமது கடன் நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் வழங்கப்படும் முயற்சிகளுடன் இணையும் சீனாவை வரவேற்பதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உலக வங்கி நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் இந்திய நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love