313
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர் என்னும் விருது வழங்கி வைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இவ் விருதினை நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் M.பிரதீபன் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ரோட்டரி கழக முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Spread the love