445
வில்பத்து பிரதேசத்திற்கு அருகில் உள்ள காட்டை அழித்து சுத்தப்படுத்திய பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . மேலும் குறித்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love