586
இங்கிலாந்து கிாிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ( Alex Hales ) அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு கிடைத்த வெற்றியுடன் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். லீக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
75 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2000 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி , 2419 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love