Home இந்தியா ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைப்பு

 ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைப்பு

by admin

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர்    ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்  சூரத் நீதிமன்றம்  , ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.  இதனால் அவா் தனது நாடாளுமன்ற  உறுப்பினா் பதவியையும் இழந்திருந்தாா்.

சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி   தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்   மேல்முறையீடு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியதுடன் . தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளாா்.

மேலும் 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாட்கள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளாா். .

2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளதுடன்  மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More