மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார் காவல்துறையினா் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்டது எனவும், சடலத்தில் கறுப்பு நிற நீள கை சேட்,கறுப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்துள்ளதாக மன்னார் காவல்துறையினா்ர் தெரிவித்துள்ளனர்.
-மேலும் அவர் அணிந்துள்ள கறுப்பு நிற அரைக் காற்சட்டையில் (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளதுடன மேலும் அவருடைய நீள கை சேட் பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப் பட்டுள்ளதோட,குறித்த பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.