Home இலங்கை  சடலத்தை அடையாளம் காண பொமக்களின்  உதவியை நாடியுள்ள  காவல்துறை 

 சடலத்தை அடையாளம் காண பொமக்களின்  உதவியை நாடியுள்ள  காவல்துறை 

by admin

மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார்   காவல்துறையினா் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மீட்கப்பட்ட   சடலம் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்டது எனவும்,   சடலத்தில் கறுப்பு நிற நீள கை சேட்,கறுப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்துள்ளதாக மன்னார்  காவல்துறையினா்ர் தெரிவித்துள்ளனர்.

-மேலும் அவர் அணிந்துள்ள கறுப்பு நிற  அரைக் காற்சட்டையில்   (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளதுடன மேலும் அவருடைய  நீள கை சேட்  பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப் பட்டுள்ளதோட,குறித்த பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.

 தலையின்  முன் பக்கம் தட்டையாகவும்  பின் பக்கம் முடியும் காணப்படுகின்றது.
எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார்  காவல் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார்  காவல்துறையினா்  பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More