533
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் பெரும் தொகை கஞ்சா போதைப்பொருள் கடத்தலை இன்றைய தினம் சனிக்கிழமை இளைஞர்கள் முறியடித்து , கஞ்சாவை மீட்டுள்ளனர். பொன்னாலை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாகனத்தை அப்பகுதி இளைஞனர்கள் கண்காணித்த போது , கடற்கரை பகுதியில் இருந்துபொதிகளை சிலர் வாகனத்தில் கொண்டு வந்து ஏற்றுவதனை அவதானித்து , வாகனத்தை முற்றுகையிட்டனர்.
அவ்வேளை பொதிகளை ஏற்றிய நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் , வாகன சாரதி இளைஞர்களிடம் அகப்பட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து இளைஞர்கள் வாகனத்தை சோதனையிட்ட போது , வாகனத்தினுள் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு இளைஞர்கள் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் வாகனத்தையும் , கஞ்சாவையும் தம்மிடம் அகப்பட்டு கொண்ட நபரையும் இளைஞர்கள் ஒப்படைத்தனர்.
இளைஞர்களிடம் அகப்பட்டுக்கொண்ட நபர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் , தற்போது மாதகல் பகுதியில் திருமணம் முடித்துள்ளார் எனவும் , வாகனத்தினுள் சுமார் 350 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா காணப்பட்டதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
Spread the love