372
அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினா் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக காவல்துறையினாிம் சரணடைந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 2 ஆம் திகதி பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான ஆசிரியர் தலைமைறைவாகி இருந்தார்.
குறித்த சந்தேக நபரான ஆசிரியர் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளதுடன் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து மாணவனை துஸ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
Spread the love