யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது. இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் பேருந்து மீது கல் வீசி தாக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்