387
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர்.
அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
ReplyReply allForward
|
Spread the love