313
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா குடிமக்கள் பேரவையானது வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கோரி வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக வட மாகாண உதவி காணி ஆணையாளர் க.சிவப்பிரியா, குடிமக்கள் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love