குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில், மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது ,
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினா் மேற்கொள்ளவுள்ளதுடன் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது. வாகனத் தரிப்பிட கட்டணங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.