416
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது..
கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும் போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இருப்பினும் முற்று முழுதாக போதைக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிக்கும் சிகிச்சை நிலையம் வடபகுதியில் இல்லை. அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின் அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.
இந் நிலையில் இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் முயற்சிகளை எடுத்திருக்கின்றார்.அதே நேரத்தில் புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love