489

யாழ்ப்பாணம் -சாவகச்சேரி காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சாவகச்சேரியை சேர்ந்த சிவபாலன் பிரவீன் (வயது 19) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love