403
செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றன. யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 63 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
Spread the love