375
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
களபூமி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த வேளை குளவிக் கொட்டுக்கு இலக்கனார். அதனை அடுத்து , வலந்தலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love