மனித உடலின் 423 உள் உறுப்புகளின் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண் வராக 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை படைத்துள்ளார். பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகளான கனிஷிகா. பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். இவா் தன் தொடர் முயற்சியினால் மனித உடலின் 423 உள் உறுப்புகளை 4 நிமிடங்களில் மனப் பாடமாக படத்தில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாா்.
இதற்கான உலக சாதனை நிகழ்வு இன்று (16) பொகவந்தலாவை ஹேலிரோசரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த சோழன் உலக சாதனை முயற்சியை அந்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு.ஸ்ரீநாகவானி ராஜா நடுவராக நேரில் கண்காணித்து உறுதி செய்ததுடன் சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.