430
யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால் , வீதியால் செல்வோர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த வீட்டில் இருந்து வீதிக்கு விடப்படும் நீர் வீதியோரமாக தேங்கிய நிலையில் காணப்படுகிறது. அதனால் வீதியால் செல்லும் வாகனங்கள் நீரின் மேலால் செல்லும் போது , வீதியோரமாக நடந்து செல்வோர் , மோட்டார் சைக்கிள் , சைக்கிளில் செல்வோருக்கு நீர் அடிக்கப்படுவதானல் அவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்
குறிப்பாக காலை வேளையில் பாடசாலை செல்லும் மாணவர்கள் , மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர் , வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் , குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டார் , மற்றும் அருகில் உள்ள தனியார் தங்குமிடம் ஆகியவையும் வீதியில் தேங்கும் நீரினால் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில் , தற்போது தனியார் தங்குமிட உரிமையாளர் வீதிக்கும் , தனது தங்குமிடத்திற்கும் இடையில் சீமெந்து மேடை அமைந்துள்ளதால் நீர் மேலும் ஓட முடியாது வீதியில் பெருமளவில் தேங்கி நிற்கின்றது.
இது தொடர்பில் பல தடவைகள் மாநகர சபையினருக்கு அறிவித்த நிலையிலும் , மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love