461
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் நீர் தாங்கி வாகனமும் (பவுசர்) மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” எனும் வளைவு பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (வயது 31) எனும் நபரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான மன்னாரை சேர்ந்த முகுந்தினி (வயது 26) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love