307
யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு மூன்று சிறப்பு காவற்துறைப் பிரிவுகள் களமிறங்கியுள்ளன.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு காவற்துறை பிரிவின் கீழ் குறித்த மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , அவைகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் காவற்துறைனர் தெரிவித்தனர்.
Spread the love