394
குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்க உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்ற தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார். அதன் ஒரு பகுதியாக தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் , யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் , அழைக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, குருந்தூர் மலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ,
குருந்தூர் மலை விவகாரத்தில் , சட்ட பிரச்சனை , காணிப்பிரச்சனை , அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கி உள்ளன. அதனால் இதொரு சிக்கலான விடயம். இதனை கவனமாக கையாள வேண்டும். இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம் . இந்த சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை காண வேண்டும். இல்லாவிடின் இதொரு பாரிய பிரச்சனையாக உருவெடுக்கு ம். இந்த பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு , அமெரிக்க அழுத்தங்களை வழங்கும் என தெரிவித்தார்.
Spread the love