763
பிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம் (BTDA -The British Tamil Dental Association) வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பல் சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நன்கொடைகளை வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.
குறித்த பல் வைத்திய குழுவினர் கடந்த ஒருவாரா காலமாக வடக்கில் உள்ள பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தற்கால நிலைமை தொடர்பாக கலந்த ஆலோசித்ததோடு தேவையானவர்களுக்கு சில பற் சிகிச்சைகளையும் வழங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love