500
இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999 ஆண்டுகளில் தனியொரு மனிதனாக நாட்டின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து இணைந்து அம்பாரை கரையோர பிரதேசமெங்கும் பாரிய பங்களிப்பை வழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியை உருவாக்கியவர் மயோன் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love