கடமையில் இருந்த பெண் காவற்துறை உத்தியோகஸ்தருடன் மது போதையில் சேட்டை புரிந்த பலாலி காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் , பலாலி காவல் நிலையத்தில் கடமையில் இருந்த தன்னுடன் , பதில் காவற்துறை பொறுப்பதிகாரியாக அன்றைய தினம் கடமையில் இருந்த காவற்துறை அதிகாரி தவறாக நடக்க முற்பட்டார் என பெண் காவற்துறை உத்தியோகஸ்தர் காவற்துறை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த காவற்துறை அதிகாரியை காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.