373
கத்தியுடன் கைதான யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனை யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக நிலையத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி , அடாவடியில் ஈடுபட்டார் என குறித்த மாணவன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு , கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவனை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய வேளை , மாணவன் போதைக்கு அடிமையானவர் என வைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து மருத்துவ அறிக்கையுடன் மாணவனை யாழ்.நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்திய வேளை , வழக்கினை விசாரித்த நீதவான் , மாணவனை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
Spread the love