397
யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய தூதுவர், அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில், புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை Industry 2023 யாழ்ப்பாண பதிப்பு தொழில் கண்காட்சியில் காண கூடியதாகவுள்ளது.
Spread the love