372
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நண்பர்களால் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து விதமான இரத்தங்களுக்கும் தட்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் உயிர் காக்க குருதி கொடுக்க மறதியின்றி வருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
Spread the love