Home இலங்கை மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்த தானம்

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்த தானம்

by admin
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்  சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம்  வழங்கினார்கள்.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.

சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.அந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More