440
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். சில்லாலை பகுதியை சேர்ந்த பத்மநாதன் வசீகரன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் , விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love