வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
பயிலவிரும்புவோர் வடமாகாண கல்வி அமைச்சில் விண்ணப்பப்படிவங்களை பெற்று கல்வி அமைச்சு , வடமாகாணம், இளைஞர் விவகார அலகு, செம்மணிவீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.