355
“சுவாபிமானி” தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பிரதேச மட்ட உத்தியோகத்தருக்கான போடடியில் நல்லூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி ரஜீவன் தர்மினி பங்குபற்றி 03 ஆம் இடத்தினைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சுவாபிமானி தேசிய விருதுகளின் சிறந்த பிரதேச மட்ட உத்தியோகத்தர்களுக்கான விருது வழங்கல் விழா மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால், கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போதே , சிறந்த பிரதேச மட்ட உத்தியோகத்தருக்கான போடடியில் நல்லூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி ரஜீவன் தர்மினி பங்குபற்றி 03 ஆம் இடத்தினைப் பெற்றார்.
Spread the love