சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி நாடாளுமன்றத்தில் இருக்கின்றரா? எனவும் அது குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06.09.23) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்உரையாற்றிய அவர்,
“தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் மிகவும் பலமாக இருந்தவரே லசந்த விக்கிரமதுங்க, இதனால் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
யார் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்களை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தாதா? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலைக்காரர் இந்த சபையில் இருக்கின்றரா? இதனை கேட்பதற்கு நான் அஞ்ச மாட்டேன். இதற்கு பதிலளியுங்கள். ஒவ்வொரு குழுக்கள், ஆயுதக் குழுக்களுக்கு நாங்கள் பயப்படவில்லை” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.